குர்ஆன் 22:67 — புனித யாத்திரை
ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடித்தாக வேண்டிய சடங்குகளின் ஒரு தொகுப்பை நாம் விதித்துள்ளோம். ஆகையால், அவர்கள் உம்முடன் சச்சரவிட வேண்டாம். ஒவ்வொருவரையும் உம் இரட்சகரின் பால் நீர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் உறுதியாக, நீர் சரியான பாதையிலேயே இருக்கின்றீர்.
[22:66] அவர்தான் உங்களுக்கு வாழ்வளித்தவர், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் அவர் மீண்டும் உங்களை வாழ்விற்குக் கொண்டு வருகின்றார். நிச்சய மாக, மனிதன் நன்றியற்றவனாக இருக் கின்றான்.
[22:68] அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது “ நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.