குர்ஆன் 22:72 — புனித யாத்திரை
நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களுக்குத் தெளிவாக ஓதிக்காட்டப்படும் போது, நம்ப மறுப்பவர்களின் முகங்களில் பொல்லாத் தனத்தை நீர் காண்பீர். நமது வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டுபவர்களை அவர்கள் கிட்டத்தட்டத் தாக்கி விடுகின்றனர். “மிகவும் மோசமான ஒன்றைப்பற்றி நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? நம்ப மறுப்பவர்களுக்குக் கடவுள்-ஆல் நரகம் வாக்களிக்கப்பட்டுள்ளது; என்ன ஒரு துன்பகரமான விதி” என்று கூறுவீராக.
[22:71] இருப்பினும், அவற்றிற்கு சக்தி எதையும், அவர் வழங்கியிருக்காத இணைத்தெய்வங்களை அவர்கள் கடவுள்-உடன் இணையாக வழிபடுகின்றனர், மேலும் அவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. வரம்பு மீறுபவர்களுக்கு உதவியாளர் எவருமிலர்.
[22:73] மனிதர்களே, நீங்கள் கவனத்துடன் சிந்திக்க வேண்டியதொரு நீதிபோதனை இதோ: கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் ஒரு போதும் ஓர் ஈயைப் படைக்கவும் இயலாது, அதைச் செய்வதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாலும் கூட. அது மட்டுமின்றி, அந்த ஈ அவர்களிடமிருந்து எதையேனும் திருடிவிட்டால், அவர்களால் அதனை மீட்டுக் கொள்ளவும் இயலாது; தொடர்பவரும் தொடரப்படுபவரும் பலவீனர் களே.