குர்ஆன் 22:73 — புனித யாத்திரை
மனிதர்களே, நீங்கள் கவனத்துடன் சிந்திக்க வேண்டியதொரு நீதிபோதனை இதோ: கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் ஒரு போதும் ஓர் ஈயைப் படைக்கவும் இயலாது, அதைச் செய்வதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாலும் கூட. அது மட்டுமின்றி, அந்த ஈ அவர்களிடமிருந்து எதையேனும் திருடிவிட்டால், அவர்களால் அதனை மீட்டுக் கொள்ளவும் இயலாது; தொடர்பவரும் தொடரப்படுபவரும் பலவீனர் களே.
[22:72] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களுக்குத் தெளிவாக ஓதிக்காட்டப்படும் போது, நம்ப மறுப்பவர்களின் முகங்களில் பொல்லாத் தனத்தை நீர் காண்பீர். நமது வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டுபவர்களை அவர்கள் கிட்டத்தட்டத் தாக்கி விடுகின்றனர். “மிகவும் மோசமான ஒன்றைப்பற்றி நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? நம்ப மறுப்பவர்களுக்குக் கடவுள்-ஆல் நரகம் வாக்களிக்கப்பட்டுள்ளது; என்ன ஒரு துன்பகரமான விதி” என்று கூறுவீராக.
[22:74] அவர்கள் கடவுள்-ஐ, அவர் மதிக்கப்பட வேண்டியவாறு மதிக்கவில்லை. கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.