குர்ஆன் 23:110 — நம்பிக்கையாளர்கள்
“ஆனால் என்னையே நீங்கள் மறக்கும் அளவிற்கு, அவர்களை நீங்கள் பரிகாசமும், கேலியும் செய்தீர் கள். அவர்களை நோக்கி நகைப்பவர்களாக நீங்கள் இருந்தீர்கள்.
[23:109] “என்னுடைய அடியார்களில் ஒரு கூட்டத்தினர், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே எங்களை மன்னிப்பீராக மேலும் எங்களை கருணையால் பொழிந்திடுவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்’ என்று கூறுபவர்களாக இருந்தனர்.
[23:111] “அவர்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பலனாக, அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியதன் மூலம்,இன்றைய தினம் நான் அவர்களுக்கு வெகுமதியளித்து விட்டேன்.”