குர்ஆன் 23:45 — நம்பிக்கையாளர்கள்
பின்னர் நமது வெளிப்பாடுகளுடனும் மேலும் ஆழ்ந்ததொரு சான்றுடனும் மோஸஸையும் மற்றும் அவருடைய சகோதரர் ஆரோனையும் நாம் அனுப்பினோம்.
[23:44] பின்னர் நாம் தொடர்ச்சியாக நம் தூதர்களை அனுப்பினோம். ஒரு தூதர் தன் சமூகத்தாரிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் அவரை நம்ப மறுத்தனர். அதன் விளைவாக, ஒன்றன் பின் மற்றொன்றாக, அவர்களை நாம் அழித்தோம், மேலும் அவர்களை சரித்திரமாக்கினோம். நம்பமறுத்த மக்கள் அழிந்து போனார்கள்.
[23:46] ஃபேரோவிடமும், அவனுடைய பிரதானிகளிடமும், ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர்களாக மாறினார்கள். அவர்கள் அடக்குமுறை செய்கின்ற மக்களாக இருந்தனர்.