Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:40 — ஒளி

மற்றொரு உருவகமாவது அலைகளுக்கு மேல் அலைகளுடன், உக்கிரமானதோர் பெருங்கடல் மத்தியில், கூடவே அடர்ந்த பனியுடன் முழுமை யான இருளினுள் இருப்பதைப் போன்றதாகும். இருளுக்கு மேல் இருள்-அவன் தன் சொந்தக் கரங்களை நோக்கினாலும், அவன் அதனை அரிதாகவே காணஇயலும். எவருக்குக் கடவுள் ஒளியைப் பறித்து விடுகின்றாரோ, அவருக்கு ஒளி எதுவும் இருக்காது.

[24:39] நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய செயல்கள் பாலைவனத்திலுள்ளதோர் கானலைப் போன்றதாகும். தாகமுள்ள ஒரு மனிதன் அதனைத் தண்ணீரென்றே நினைக்கின்றான். ஆனால் அவன் அதனை அடையும் போது, அது ஒன்றுமேயில்லை என்பதை அவன் காண்கின்றான், மேலும் அதற்கு மாறாக, அவனுடைய செயல்களுக்கு அவனை முற்றிலும் பழிதீர்ப்பதற்காகக், கடவுள்-ஐ அங்கே அவன் காண்கின்றான். கடவுள் தான் மிகத்திறன் வாய்ந்த கணக்காளர்.

[24:41] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும், இன்னும் பறவைகள் அவை ஒரு வரிசையில் பறந்தவைகளாக கடவுள்-ஐத் துதிப்பதை நீங்கள் உணரவில்லையா? ஒவ் வொன்றும் அதன் தொழுகையையும் மேலும் அதன் துதிப்பையும் அறிந்திருக்கின்றது. அவை செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.