குர்ஆன் 24:41 — ஒளி
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும், இன்னும் பறவைகள் அவை ஒரு வரிசையில் பறந்தவைகளாக கடவுள்-ஐத் துதிப்பதை நீங்கள் உணரவில்லையா? ஒவ் வொன்றும் அதன் தொழுகையையும் மேலும் அதன் துதிப்பையும் அறிந்திருக்கின்றது. அவை செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[24:40] மற்றொரு உருவகமாவது அலைகளுக்கு மேல் அலைகளுடன், உக்கிரமானதோர் பெருங்கடல் மத்தியில், கூடவே அடர்ந்த பனியுடன் முழுமை யான இருளினுள் இருப்பதைப் போன்றதாகும். இருளுக்கு மேல் இருள்-அவன் தன் சொந்தக் கரங்களை நோக்கினாலும், அவன் அதனை அரிதாகவே காணஇயலும். எவருக்குக் கடவுள் ஒளியைப் பறித்து விடுகின்றாரோ, அவருக்கு ஒளி எதுவும் இருக்காது.
[24:42] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது, மேலும் இறுதி விதி கடவுள்-இடமே உள்ளது.