Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:44 — ஒளி

கடவுள் இரவையும், பகலையும் கட்டுப்படுத்து கின்றார். கண்களுடையவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.

[24:43] கடவுள் மேகங்களை ஓட்டுகின்றார், பின்னர் அவற்றை ஒன்றாகச் சேர்க்கின்றார், பின்னர் அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்குகின்றார், பின்னர் அவற்றிலிருந்து மழை வெளிவருவதை நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? அவர் விண்ணி லிருந்து ஏராளமான பனியைக் கீழே அனுப்பி தான் நாடுகின்ற எவரையும் மூடவும், அதே சமயம் தான் நாடுகின்ற எவரிடமிருந்தும் அதனை விலக்கவும் செய்கின்றார். அந்த பனியின் பிரகாசமானது கண்களைக் கிட்டத்தட்ட குருடாக்கி விடுகின்றது.

[24:45] மேலும் கடவுள் தண்ணீரிலிருந்தே ஒவ்வொரு உயிர்ப்பிராணியையும் படைத்தார். அவற்றில் சில தங்கள் வயிறுகளால் நடக்கின்றன, சில இருகால்களால் நடக்கின்றன, மேலும் சில நான்கால் நடக்கின்றன. தான் நாடுகின்ற எதையும் கடவுள் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.