Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:43 — ஒளி

கடவுள் மேகங்களை ஓட்டுகின்றார், பின்னர் அவற்றை ஒன்றாகச் சேர்க்கின்றார், பின்னர் அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்குகின்றார், பின்னர் அவற்றிலிருந்து மழை வெளிவருவதை நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? அவர் விண்ணி லிருந்து ஏராளமான பனியைக் கீழே அனுப்பி தான் நாடுகின்ற எவரையும் மூடவும், அதே சமயம் தான் நாடுகின்ற எவரிடமிருந்தும் அதனை விலக்கவும் செய்கின்றார். அந்த பனியின் பிரகாசமானது கண்களைக் கிட்டத்தட்ட குருடாக்கி விடுகின்றது.

[24:42] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது, மேலும் இறுதி விதி கடவுள்-இடமே உள்ளது.

[24:44] கடவுள் இரவையும், பகலையும் கட்டுப்படுத்து கின்றார். கண்களுடையவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.