Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:54 — ஒளி

“கடவுள்-க்குக் கீழ்ப்படியுங்கள், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் மறுத்துவிட்டால், பின்னர் அவருடைய கடமைகளுக்கு அவர் பொறுப் பாவார், மேலும் உங்கள் கடமைகளுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந் தால், நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள் . தூதரின் ஒரே பணி (தூதுச்செய்தியை) ஒப்படைப்பதே.

[24:53] புறப்படும்படி அவர்களுக்கு நீர் கட்டளை யிட்டால், நாங்கள் புறப்படுவோம், என்று கடவுள் மீது அவர்கள், பயபக்தியோடு சத்தியம் செய்கின்றார்கள். “சத்தியம் செய்யாதீர்கள். கீழ்ப்படிதல் ஒரு கடமையாகும். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறுவீராக.

[24:55] உங்களில் நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு, அவர் செய்தவாறே அவர்களையும் பூமியின் மீது ஆட்சியாளர்களாக அவர் ஆக்குவார் என்று கடவுள் வாக்களிக்கின்றார், மேலும் அவர்களுக்காக அவர் தேர்ந்தெடுத்து கொண்ட மார்க்கத்தை அவர் அவர்களுக்காக நிலைப்படுத்துவார், மேலும் பயம் இருந்த இடத்தில் அமைதியையும் மற்றும் பாதுகாப்பையும் அவர் மாற்றி அமைப்பார். இவை அனைத்தும் அவர்கள் என்னை மட்டும் வழிபட்டதற்காகவேயாகும்; அவர்கள் என்னுடன் இணைத் தெய்வங்கள் எதையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டார்கள். இதன் பின்னரும் நம்ப மறுப்பவர்கள் உண்மை யில் தீயவர்களேயாவர்.