Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:63 — ஒளி

நீங்கள் ஒருவர் மற்றவருடைய வேண்டுகோள் களைக் கருதுவதைப் போல தூதருடைய வேண்டுகோள்களைக் கருதாதீர்கள். உங்களில் பலவீனமான சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தி நழுவிச் சென்று விடுபவர்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் - அவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் ஒரு பேரழிவோ அல்லது கடுமையானதொரு தண்டனையோ அவர்களைத் தாக்கக்கூடும்.

[24:62] கடவுள் மீதும் அவருடைய தூதர்* மீதும் நம்பிக்கை கொண்டவர்களே உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர், மேலும் அவர்கள் அவருடன் ஒரு சமூகக் கூட்டத்தில் இருக்கும் போது, அனுமதியின்றி அவரை விட்டுச் சென்றுவிட மாட்டார்கள். அனுமதி கேட்பவர் களே கடவுள் மீதும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். தங்களுடைய விவகாரங்களில் சிலவற்றைக் கவனிப்பதற் காக, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், நீர் விரும்பியவருக்கு நீர் அனுமதி வழங்கலாம், மேலும் அவர்களை மன்னிக்கும்படிக் கடவுள்-இடம் கேட்பீராக. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[24:64] பரிபூரணமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், கடவுள்-க் குரியது. நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் முற்றிலும் அறிகின்றார். அவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர்களுக்கு அவர் தெரிவிப்பார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.