குர்ஆன் 25:53 — சட்டப்புத்தகம்
அவர்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்ப் பவர்; ஒன்று புதியதாகவும் மேலும் நாவிற் கினியதாகவும் உள்ளது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும், அருந்த முடியாத தாகவும் உள்ளது. மேலும் அவர் வலிமையான, மீறமுடியாததொரு தடை (ஆவியாதல்) கொண்டு அவற்றைப் பிரித்தார்.
[25:52] ஆகையால், நம்ப மறுப்பவர்களுக்குக் கீழ்ப் படியாதீர், மேலும் இதனைக்கொண்டு அவர் களுக்கெதிராகப் பாடுபடுவீராக, ஒரு மிகப்பெரும்பாடு.
[25:54] அவர்தான் தண்ணீரிலிருந்து ஒரு மனிதனைப் படைத்து, பின்னர் திருமணம் மற்றும் தாம்பத்யம் மூலம் அவனை இனப்பெருக்கம் செய்யச் செய்தார். உம் இரட்சகர் சர்வ சக்தியுடையவர்.