குர்ஆன் 25:54 — சட்டப்புத்தகம்
அவர்தான் தண்ணீரிலிருந்து ஒரு மனிதனைப் படைத்து, பின்னர் திருமணம் மற்றும் தாம்பத்யம் மூலம் அவனை இனப்பெருக்கம் செய்யச் செய்தார். உம் இரட்சகர் சர்வ சக்தியுடையவர்.
[25:53] அவர்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்ப் பவர்; ஒன்று புதியதாகவும் மேலும் நாவிற் கினியதாகவும் உள்ளது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும், அருந்த முடியாத தாகவும் உள்ளது. மேலும் அவர் வலிமையான, மீறமுடியாததொரு தடை (ஆவியாதல்) கொண்டு அவற்றைப் பிரித்தார்.
[25:55] இருப்பினும், வழக்கமாக, அவர்களுக்கு நன்மை செய்யவோ அன்றி அவர்களுக்குத் தீமை செய்யவோ இயலாத இணைத் தெய்வங் களை அவர்கள் கடவுள்-உடன்அமைத்துக் கொள்கின்றனர். உண்மையில், நம்ப மறுப்பவன் தன்னுடைய இரட்சகரின் ஒரு விரோதியாவான்.