Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:17 — எறும்பு

ஜின்களிலும் மனிதர்களிலும், அவ்வண்ணமே பறவைகளிலும் இருந்த அவருக்குக் கீழ்ப்படிந்த படைவீரர்கள் ஸாலமனின் பணிக்கென ஒன்று திரட்டப்பட்டிருந்தனர்; அனைத்தும் அவருடைய முடிவின்படி.

[27:16] ஸாலமன், டேவிட்டின் வாரிசாக இருந்தார். அவர், “மக்களே, பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டு நாங்கள் கொடையளிக்கப்பட்டுள்ளோம், மேலும் அனைத்து விதமான பொருட்களும் எங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ளன. உண்மையில் இது மெய்யான தொரு அருட்கொடையாகும்” என்று கூறினார்.

[27:18] எறும்புகளின் பள்ளத்தாக்கை அவர்கள் நெருங்கியபோது, ஓர் எறும்பு, “எறும்புகளே, ஸாலமனும் அவருடைய படையினரும் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுடைய வீடுகளுக்குள் சென்று விடுங்கள்”* என்று கூறியது.