குர்ஆன் 27:80 — எறும்பு
இறந்துவிட்டவர்களையோ, அன்றிச் செவிடர் களையோ, அவர்கள் திரும்பிச்சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும் படிச் செய்ய உம்மால் முடியாது.
[27:79] ஆகையால், உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; தெளிவான சத்தியத்தையே நீர் பின்பற்றுகின்றீர்.
[27:81] அன்றியும், குருடர்களை அவர்களுடைய வழிகேட்டிலிருந்து வெளியில் நடத்தவும் உம்மால் முடியாது. நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டு அடிபணிந்தோராக இருக்க முடிவெடுத்தவர்கள் மட்டுமே உம்மைச் செவியேற்பார்கள்.