குர்ஆன் 27:82 — எறும்பு
சரியான தருணத்தில், மனிதர்கள் நம் வெளிப்பாடுகளைக் குறித்து உறுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதை அறிவிக்கின்ற, பூமியின் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு சிருஷ்டிப்பொருளை, அவர்களுக்காக நாம் உருவாக்குவோம்.
[27:81] அன்றியும், குருடர்களை அவர்களுடைய வழிகேட்டிலிருந்து வெளியில் நடத்தவும் உம்மால் முடியாது. நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டு அடிபணிந்தோராக இருக்க முடிவெடுத்தவர்கள் மட்டுமே உம்மைச் செவியேற்பார்கள்.
[27:83] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும், நமது சான்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாத சிலரை, நிர்ப்பந்தமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.