குர்ஆன் 27:84 — எறும்பு
அவர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர், “எனது வெளிப்பாடுகளை, அவற்றைப் பற்றிய அறிவை நீங்கள் அடைவதற்கு முன்னர் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டீர்கள். இதுதான் நீங்கள் செய்தது அல்லவா?” என்று கூறுவார்.
[27:83] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும், நமது சான்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாத சிலரை, நிர்ப்பந்தமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.
[27:85] அவர்களுடைய தீமைகளுக்குரிய கூலிக்கு அவர்கள் உள்ளாவார்கள்; அவர்கள் எதுவும் கூற மாட்டார்கள்.