குர்ஆன் 28:10 — சரித்திரம்
மோஸஸின் தாயாருடைய மனம், கிட்டத்தட்ட அவரை அடையாளம் காட்டிவிடும் அளவிற்குக் கவலையை வளர்த்துக் கொண்டது. ஆனால் அவரை ஒரு நம்பிக்கையாளராக்குவதற்காக, அவருடைய இதயத்தை நாம் பலப்படுத்தினோம்.
[28:9] ஃபேரோவின் மனைவி, “எனக்கும் உமக்கும் மகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு கண்டுபிடிப்பாக இது அமையலாம். அவரைக் கொன்று விடாதீர், ஏனெனில் அவர் நமக்கு ஏதேனும் பலனளிக்கக் கூடும், அல்லது நம்முடைய மகனாக அவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். அவர்கள் எதையும் அறிந்திருக்க வில்லை.
[28:11] அவர் அவருடைய சகோதரியிடம், “அவருடைய பாதையைப் பின் தொடர்வாயாக” என்று கூறினார். அவர்கள் உணர்ந்து கொள்ளாத அதே சமயம், அவள் அவரைத் தொலைவிலிருந்து கண்காணி த்தாள்.