குர்ஆன் 28:11 — சரித்திரம்
அவர் அவருடைய சகோதரியிடம், “அவருடைய பாதையைப் பின் தொடர்வாயாக” என்று கூறினார். அவர்கள் உணர்ந்து கொள்ளாத அதே சமயம், அவள் அவரைத் தொலைவிலிருந்து கண்காணி த்தாள்.
[28:10] மோஸஸின் தாயாருடைய மனம், கிட்டத்தட்ட அவரை அடையாளம் காட்டிவிடும் அளவிற்குக் கவலையை வளர்த்துக் கொண்டது. ஆனால் அவரை ஒரு நம்பிக்கையாளராக்குவதற்காக, அவருடைய இதயத்தை நாம் பலப்படுத்தினோம்.
[28:12] செவிலித்தாய்கள் யாவரையும் ஏற்றுக் கொள் வதை விட்டும் நாம் அவரைத் தடுத்தோம். (அவருடைய சகோதரி) பின்னர், “உங்களுக்காக அவரை வளர்த்தெடுக்கவும், மேலும் அவர் மீது நல்ல கவனம் எடுத்துக் கொள்ளவும் கூடிய ஒரு குடும்பத்தை என்னால் உங்களுக்குக் காட்ட இயலும்” என்று கூறினாள்.