குர்ஆன் 28:30 — சரித்திரம்
அவர் அதனை அடைந்தபோது, எரிகின்ற புதர் இருந்த அருள்பாலிக்கப்பட்ட இடத்தில், பள்ளத் தாக்கின் வலப்புற ஓரத்திலிருந்து அவர் அழைக்கப்பட்டார் : “மோஸஸே, நான் தான். கடவுள்; பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[28:29] அவர் தன் கடமையைப் பூர்த்தி செய்து விட்ட போது, அவர் தன் குடும்பத்தாருடன் (எகிப்தை நோக்கி) பயணம் செய்தார். சினாய் மலையின் சரிவில் இருந்து ஒரு நெருப்பை அவர் கண்டார். அவர் தன்னுடைய குடும்பத்தாரிடம்,“இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். ஒருவேளை உங்களுக்கு நான் செய்தியைக் கொண்டு வரவோ, அல்லது உங்களை கதகதப்பாக்க நெருப்பிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டு வரவோ கூடும்” என்று கூறினார்.
[28:31] “உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக”. அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்ட போது, அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, திரும்பி வாரும்; பயப்படாதீர். நீர் பூரணமான பாதுகாப்புடன் இருக்கின்றீர்.