Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:31 — சரித்திரம்

“உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக”. அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்ட போது, அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, திரும்பி வாரும்; பயப்படாதீர். நீர் பூரணமான பாதுகாப்புடன் இருக்கின்றீர்.

[28:30] அவர் அதனை அடைந்தபோது, எரிகின்ற புதர் இருந்த அருள்பாலிக்கப்பட்ட இடத்தில், பள்ளத் தாக்கின் வலப்புற ஓரத்திலிருந்து அவர் அழைக்கப்பட்டார் : “மோஸஸே, நான் தான். கடவுள்; பிரபஞ்சத்தின் இரட்சகர்.

[28:32] “உமது பைக்குள் உமது கரத்தை வைப்பீராக; ஒரு மாசுமின்றி வெண்மையாக அது வெளி வரும். உமது கரங்களைக் கட்டிக் கொண்டு உம்முடைய அச்சத்திலிருந்து அமைதி அடைவீராக. இவை ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் காட்டப்படுவதற்காக, உம் இரட்சகரிடமிருந்துள்ள இரு சான்றுகளாகும்; அவர்கள் தீய மக்களாக ஆகி விட்டார்கள்.”