Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:32 — சரித்திரம்

“உமது பைக்குள் உமது கரத்தை வைப்பீராக; ஒரு மாசுமின்றி வெண்மையாக அது வெளி வரும். உமது கரங்களைக் கட்டிக் கொண்டு உம்முடைய அச்சத்திலிருந்து அமைதி அடைவீராக. இவை ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் காட்டப்படுவதற்காக, உம் இரட்சகரிடமிருந்துள்ள இரு சான்றுகளாகும்; அவர்கள் தீய மக்களாக ஆகி விட்டார்கள்.”

[28:31] “உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக”. அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்ட போது, அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, திரும்பி வாரும்; பயப்படாதீர். நீர் பூரணமான பாதுகாப்புடன் இருக்கின்றீர்.

[28:33] அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்களில் ஒருவனை நான் கொலை செய்து விட்டேன், மேலும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார் களோ என்று நான் அஞ்சுகின்றேன்.