குர்ஆன் 28:64 — சரித்திரம்
“(உங்களுக்கு உதவ) உங்களுடைய இணைத்தெய்வங்களை அழையுங்கள்,” என்று கூறப்படும். அவர்கள் அவர்களை அழைப்பார்கள், ஆனால் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் தண்டனையால் துன்புறுவார்கள், மேலும் வழிநடத்தப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமே என விரும்புவார்கள்!
[28:63] தீர்ப்பிற்கு உள்ளானவர்கள், “ எங்கள் இரட்சகரே, இவர்களைத்தான் நாங்கள் வழிதவறச் செய்தோம்; நாங்களே வழிதவறிச் சென்று விட்டவர்களாக இருந்தக் காரணத்தினால் தான் நாங்கள் அவர்களை வழி தவறச் செய்தோம். இப்போது நாங்கள் எங்களை உமக்கு முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்கின்றோம். அவர்கள் உண்மையில் எங்களை வழிபட்டுக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
[28:65] அந்நாளில், அவர் ஒவ்வொருவரையும்,“தூதர்களுக்கு எவ்வாறு நீங்கள் மறுமொழி அளித்தீர்கள்?” என்று கேட்பார்.