Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:71 — சரித்திரம்

“மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் இரவை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுக்கு ஒளியை வழங்க இயலும்? நீங்கள் செவியேற்கவில்லையா?” என்று கூறுவீராக.

[28:70] அவர்தான் ஒரே கடவுள்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. இந்த முதல்வாழ்விலும், மற்றும் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்குரியது. அனைத்துத் தீர்ப்பும் அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

[28:72] “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் பகலின் ஒளியை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுடைய ஓய்விற்கென ஓர் இரவை உங்களுக்கு வழங்க இயலும்? நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறுவீராக.