குர்ஆன் 28:81 — சரித்திரம்
நாம் பின்னர் அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமி விழுங்கும்படிச் செய்தோம். கடவுள்-க்கெதிராக எந்தப் படையும் அவனுக்கு உதவி செய்திருக்க முடியாது; வெற்றி பெற்ற ஒருவனாக இருக்க அவன் விதிக்கப்படவில்லை.
[28:80] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர் களைப் பொறுத்த வரை, அவர்கள், “உங்களுக்குக் கேடுதான், நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குக் கடவுள்-ன் வெகுமதி மிகவும் மேலான தாகும்” என்று கூறினார்கள். உறுதியுடையவரைத் தவிர எவரும் இதனை அடைவதில்லை.
[28:82] முந்திய தினம் அவனைக் குறித்துப் பொறாமைப் பட்டவர்கள், “ தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு வழங்குபவரும், மேலும் நிறுத்தி வைத்துக் கொள்பவரும் கடவுள் தான் என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். கடவுள்- ன் அருள் நம் பால் இல்லாதிருந்தால், நம்மையும் கூட பூமி விழுங்கும் படிச் செய்திருக்க அவரால் இயலும். நம்ப மறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள் என்பதை இப்போது நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.