Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:83 — சரித்திரம்

பூமியில் பெருமையையோ, அன்றி சீர்குலை வையோ தேடாதவர்களுக்கென மறுவுலக வீட்டை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.

[28:82] முந்திய தினம் அவனைக் குறித்துப் பொறாமைப் பட்டவர்கள், “ தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு வழங்குபவரும், மேலும் நிறுத்தி வைத்துக் கொள்பவரும் கடவுள் தான் என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். கடவுள்- ன் அருள் நம் பால் இல்லாதிருந்தால், நம்மையும் கூட பூமி விழுங்கும் படிச் செய்திருக்க அவரால் இயலும். நம்ப மறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள் என்பதை இப்போது நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.

[28:84] நன்னெறியான செயல்கள் புரிகின்ற எவராயினும் மிக மேலான வெகுமதியைப் பெறுகின்றார். பாவங்கள் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனை அவர்களுடைய செயல்களுக்கு மிகச்சரியாக சமமானதாக இருக்கும்.