குர்ஆன் 28:84 — சரித்திரம்
நன்னெறியான செயல்கள் புரிகின்ற எவராயினும் மிக மேலான வெகுமதியைப் பெறுகின்றார். பாவங்கள் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனை அவர்களுடைய செயல்களுக்கு மிகச்சரியாக சமமானதாக இருக்கும்.
[28:83] பூமியில் பெருமையையோ, அன்றி சீர்குலை வையோ தேடாதவர்களுக்கென மறுவுலக வீட்டை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.
[28:85] நிச்சயமாக, இந்தக் குர்ஆனை உங்களுக்கு விதியாக்கிய அந்த ஒருவர், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சந்திப்பிற்காக உங்களை வரவழைப்பார். “எவர்கள் வழிகாட்டலை ஆதரிப்பவர்கள் என்பதையும், மேலும் எவர்கள் வழிதவறிச் சென்று விட்டவர்கள் என்பதையும் என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.