Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:85 — சரித்திரம்

நிச்சயமாக, இந்தக் குர்ஆனை உங்களுக்கு விதியாக்கிய அந்த ஒருவர், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சந்திப்பிற்காக உங்களை வரவழைப்பார். “எவர்கள் வழிகாட்டலை ஆதரிப்பவர்கள் என்பதையும், மேலும் எவர்கள் வழிதவறிச் சென்று விட்டவர்கள் என்பதையும் என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.

[28:84] நன்னெறியான செயல்கள் புரிகின்ற எவராயினும் மிக மேலான வெகுமதியைப் பெறுகின்றார். பாவங்கள் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனை அவர்களுடைய செயல்களுக்கு மிகச்சரியாக சமமானதாக இருக்கும்.

[28:86] இந்த வேதம் உமது வழியில் வரும் என நீர் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை; ஆனால் இது உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணையே ஆகும். ஆகையால், நம்பமறுப்பவர்களுடன் நீர் அணி சேரவேண்டாம்.