குர்ஆன் 29:33 — சிலந்திப் பூச்சி
லோத்தின் இருப்பிடத்திற்கு நம் தூதர்கள் வந்து சேர்ந்த போது, அவர்கள் தவறாக நடத்தப் பட்டனர், மேலும் அவர்களுடைய வருகை யினால் அவர் சங்கடத்திற்குள்ளானார். ஆனால் அவர்கள் கூறினர், “அச்சம் எதுவும் கொள்ளாதீர், மேலும் கவலையும் படாதீர். உம்மையும் உம் குடும்பத்தாரையும் நாங்கள் காப்பாற்றுவோம், உம்முடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக்கின்றாள்.
[29:32] அவர், “ ஆனால் அங்கே லோத் வசிக்கின்றார்” என்று கூறினார். அவர்கள், “அதில் வசிக்கின்ற ஒவ்வொருவரைப் பற்றியும் நாங்கள் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் காப் பாற்றி விடுவோம், அவருடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக் கின்றாள்” என்று கூறினார்கள்.
[29:34] “அவர்களுடைய தீச்செயல்களின் விளை வாக, விண்ணிலிருந்து ஒரு பேரழிவை இந் நகரின் மக்கள் மீது நாங்கள் ஊற்றுவோம்.”