Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:32 — சிலந்திப் பூச்சி

قالَ إِنَّ فيها لوطًا ۚ قالوا نَحنُ أَعلَمُ بِمَن فيها ۖ لَنُنَجِّيَنَّهُ وَأَهلَهُ إِلَّا امرَأَتَهُ كانَت مِنَ الغٰبِرينَ

அவர், “ ஆனால் அங்கே லோத் வசிக்கின்றார்” என்று கூறினார். அவர்கள், “அதில் வசிக்கின்ற ஒவ்வொருவரைப் பற்றியும் நாங்கள் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் காப் பாற்றி விடுவோம், அவருடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக் கின்றாள்” என்று கூறினார்கள்.

[29:31] (ஐசக்கின் பிறப்பு குறித்த) நற்செய்தியுடன் நம் தூதர்கள் ஆப்ரஹாமிடம் சென்ற போது, அவர்கள்,“(சோடம் எனும்) அந்நகரின் மக்களை அழிப்பதற்கு நாங்கள் சென்று கொண்டு இருக்கின்றோம். ஏனெனில் அதன் மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்” என்றும் கூறினார்கள்.

[29:33] லோத்தின் இருப்பிடத்திற்கு நம் தூதர்கள் வந்து சேர்ந்த போது, அவர்கள் தவறாக நடத்தப் பட்டனர், மேலும் அவர்களுடைய வருகை யினால் அவர் சங்கடத்திற்குள்ளானார். ஆனால் அவர்கள் கூறினர், “அச்சம் எதுவும் கொள்ளாதீர், மேலும் கவலையும் படாதீர். உம்மையும் உம் குடும்பத்தாரையும் நாங்கள் காப்பாற்றுவோம், உம்முடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக்கின்றாள்.