குர்ஆன் 29:34 — சிலந்திப் பூச்சி
“அவர்களுடைய தீச்செயல்களின் விளை வாக, விண்ணிலிருந்து ஒரு பேரழிவை இந் நகரின் மக்கள் மீது நாங்கள் ஊற்றுவோம்.”
[29:33] லோத்தின் இருப்பிடத்திற்கு நம் தூதர்கள் வந்து சேர்ந்த போது, அவர்கள் தவறாக நடத்தப் பட்டனர், மேலும் அவர்களுடைய வருகை யினால் அவர் சங்கடத்திற்குள்ளானார். ஆனால் அவர்கள் கூறினர், “அச்சம் எதுவும் கொள்ளாதீர், மேலும் கவலையும் படாதீர். உம்மையும் உம் குடும்பத்தாரையும் நாங்கள் காப்பாற்றுவோம், உம்முடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக்கின்றாள்.
[29:35] புரிந்து கொள்ளக் கூடிய மக்களுக்கு ஆழ்ந்த தொரு படிப்பினையாகத் திகழ்வதற்காக, அவற்றின் அழிவுச்சின்னங்களில் சிலவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டோம்.