குர்ஆன் 29:4 — சிலந்திப் பூச்சி
பாவங்களைச் செய்பவர்கள் நம்மை எப்போதும் ஏமாற்றி விடஇயலும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனரா? அவர்களுடைய கருத்து உண்மையில் தவறானதாகும்.
[29:3] அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்தோம், ஏனெனில் உண்மையாளர் களாக இருப்பவர்களைக் கடவுள் சிறப்பிக்க வேண்டியது உள்ளது, மேலும் பொய்யர்களை அவர் வெளிப்படுத்த வேண்டியதும் உள்ளது.
[29:5] கடவுள்-ஐச் சந்திப்பதை எதிர்பார்க்கும் எவர் ஒருவரும், கடவுள்-உடன் அத்தகையதொரு சந்திப்பு மிக நிச்சயமாக நிகழ்ந்தேறும் (என்பதை அறிந்து கொள்ள வேண்டும்). அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.