Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:110 — இம்ரானின் குடும்பத்தினர்

மக்களின் மத்தியில் தோன்றிய சமூகங்களி லேயே நீங்கள் தான் மிகச் சிறந்த சமூகம்: நீங்கள் நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கின்றீர்கள், இன்னும் கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மேலானதாக இருக்கும். அவர்களில் சிலர் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்தான்.

[3:109] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் எல்லா விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

[3:111] உங்களை அவமரியாதை செய்வதைத்தவிர, வேறு எந்தத்தீங்கும் அவர்களால் ஒரு போதும் உங்களுக்கு செய்து விட இயலாது. உங்களுடன் அவர்கள் சண்டையிட்டால், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள். அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.