Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:121 — இம்ரானின் குடும்பத்தினர்

(முஹம்மதே) யுத்தத்தில் நம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் நிலைகளை நீர் நிர்ணயம் செய்வதற்காக உம் சமூகத்தார் மத்தியில் நீர் இருந்ததை நினைவு கூர்வீராக. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[3:120] நல்லது எதுவும் உங்கள் வழியில் வரும் போது அவர்கள் வருந்துகின்றனர், மேலும் உங்களு க்கு ஏதேனும் தீங்கு நேரும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உறுதியாய், விடாமுயற்சியுடன் நன்னெறியினைப் பேணி வந்தால், அவர்களின் சூழ்ச்சிகள் உங்களை ஒரு போதும் காயப்படுத்தாது. கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் முற்றிலும் அறிந்தவர்.

[3:122] உங்கள் மத்தியில் இருபிரிவினர் கிட்டத்தட்ட தவறிவிட்டனர், ஆனால் கடவுள் அவர்களின் இரட்சகராக இருந்தார். கடவுள் மீதே நம்பிக்கையாளர்கள் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.