Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:125 — இம்ரானின் குடும்பத்தினர்

உண்மையில், நீங்கள் உறுதியாய், விடா முயற்சியுடன் நன்னெறியைப் பேணி வந்தால், அப்பொழுது அவர்கள் உங்களைத் திடீரெனத் தாக்கினாலும், உங்கள் இரட்சகர் நன்கு பயிற்சி பெற்ற ஐந்தாயிரம்* வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிவார்.

[3:124] நீர் நம்பிக்கையாளர்களிடம், “மூவாயிரம் வானவர்களைக் கீழே அனுப்பியது கொண்டு உங்கள் இரட்சகர் உங்களுக்கு உதவி புரிவது போதாதா?” என்று கூறினீர்.

[3:126] உங்களுக்கு நற்செய்தி தந்து, மேலும் உங்கள் இதயங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு, கடவுள் இவ்வாறு உங்களுக்கு அறிவிக் கின்றார். சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிரம்பியவருமான கடவுள்-இடமிருந்தே வெற்றி வருகின்றது.