குர்ஆன் 3:126 — இம்ரானின் குடும்பத்தினர்
உங்களுக்கு நற்செய்தி தந்து, மேலும் உங்கள் இதயங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு, கடவுள் இவ்வாறு உங்களுக்கு அறிவிக் கின்றார். சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிரம்பியவருமான கடவுள்-இடமிருந்தே வெற்றி வருகின்றது.
[3:125] உண்மையில், நீங்கள் உறுதியாய், விடா முயற்சியுடன் நன்னெறியைப் பேணி வந்தால், அப்பொழுது அவர்கள் உங்களைத் திடீரெனத் தாக்கினாலும், உங்கள் இரட்சகர் நன்கு பயிற்சி பெற்ற ஐந்தாயிரம்* வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிவார்.
[3:127] இவ்விதமாக அவர் சில நம்பமறுப்பவர்களை அழிக்கின்றார், அல்லது அவர்களை முடக்கி விடுகின்றார்; அவர்கள் எப்பொழுதும் தோல்வி யுற்றவர்களாகத்தான் முடிவடைவார்கள்.