குர்ஆன் 3:129 — இம்ரானின் குடும்பத்தினர்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது அவர் தான் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்றவர்களைத் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[3:128] இது உம்மைப் பொறுத்தது அல்ல; அவர் அவர் களை மீட்டுக் கொள்ளவும் செய்யலாம் அல்லது அவர் அவர்களை அவர்களின் வரம்பு மீறல் களுக்காக தண்டிக்கவும் செய்யலாம்.
[3:130] நம்பிக்கை கொண்டோரே, பல்கிப் பெருகும் கடும் வட்டியினை நீங்கள் வாங்காதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள்.