குர்ஆன் 3:130 — இம்ரானின் குடும்பத்தினர்
நம்பிக்கை கொண்டோரே, பல்கிப் பெருகும் கடும் வட்டியினை நீங்கள் வாங்காதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள்.
[3:129] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது அவர் தான் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்றவர்களைத் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[3:131] நம்ப மறுப்பவர்களுக்காகக் காத்துக் கொண் டிருக்கும் நரக நெருப்பிற்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.