குர்ஆன் 3:135 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் பாவத்தில் விழுந்து விட்டாலோ, அல்லது தங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழை த்துக் கொண்டாலோ, அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்து தங்களுடைய பாவங்களுக் காகப் பாவ மன்னிப்புக் கேட்பார்கள் - மேலும் கடவுள்-ஐ அன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்?-இன்னும் அவர்கள் தெரிந்து கொண்டே பாவங்களில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள்.
[3:134] அவர்கள் நல்ல காலங்களிலும், அத்துடன் கெட்ட காலங்களிலும் தானம் வழங்குவார்கள், அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்கள் பிழைகளைப் பொறுத்துக் கொள்வார்கள். தர்மவான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.
[3:136] அவர்களின் வெகுமதி அவர்கள் இரட்சகரிட மிருந்துள்ள மன்னிப்பும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் ஆகும்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள். பணி செய்பவர்களுக்கு எத்தகைய ஒரு அருள் பாலிக்கப்பட்ட வெகுமதி!