குர்ஆன் 3:143 — இம்ரானின் குடும்பத்தினர்
அதனைச் சந்திப்பதற்கு முன்னர் நீங்கள் மரணத்தை மிகவும் விரும்பிக் கொண்டிருந் தீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நேரெதிரே, அதை நீங்கள் சந்திக்கின்றீர்கள்.
[3:142] உங்களில் பாடுபடுபவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டாமலும் மேலும் உறுதியாய் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளங்காட்டாமலும் நீங்கள் சுவனத்தில் நுழைவதை எதிர்பார்க்கின்றீர்களா?
[3:144] முஹம்மது, அவருக்கு முன்பிருந்த தூதர் களைப் போன்ற ஒரு தூதராக இருந்தவரே அன்றி வேறில்லை. அவர் மரணித்து விட்டால், அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் உங்களின் குதிகால்களால் திரும்பிவிடு வீர்களா? எவர் ஒருவர் தனது குதிகால்களால் திரும்பி விடுகின்றாரோ, அவர் சிறிதளவும் கடவுள்-க்குத் தீங்கிழைத்து விடவில்லை. நன்றியுடையவர்களாக இருப்போருக்குக் கடவுள் வெகுமதி அளிக்கின்றார