குர்ஆன் 3:144 — இம்ரானின் குடும்பத்தினர்
முஹம்மது, அவருக்கு முன்பிருந்த தூதர் களைப் போன்ற ஒரு தூதராக இருந்தவரே அன்றி வேறில்லை. அவர் மரணித்து விட்டால், அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் உங்களின் குதிகால்களால் திரும்பிவிடு வீர்களா? எவர் ஒருவர் தனது குதிகால்களால் திரும்பி விடுகின்றாரோ, அவர் சிறிதளவும் கடவுள்-க்குத் தீங்கிழைத்து விடவில்லை. நன்றியுடையவர்களாக இருப்போருக்குக் கடவுள் வெகுமதி அளிக்கின்றார
[3:143] அதனைச் சந்திப்பதற்கு முன்னர் நீங்கள் மரணத்தை மிகவும் விரும்பிக் கொண்டிருந் தீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நேரெதிரே, அதை நீங்கள் சந்திக்கின்றீர்கள்.
[3:145] முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில், கடவுள்-ன் அனுமதியுடனே அன்றி எவர் ஒருவரும் மரணமடைவதில்லை. எவர் இவ்வுல கின் வீண் பெருமைகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து வழங்குகின்றோம், மேலும் எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து அருள்புரிகின்றோம். நன்றியுடையவர்களாக இருப்போருக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.