Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:145 — இம்ரானின் குடும்பத்தினர்

முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில், கடவுள்-ன் அனுமதியுடனே அன்றி எவர் ஒருவரும் மரணமடைவதில்லை. எவர் இவ்வுல கின் வீண் பெருமைகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து வழங்குகின்றோம், மேலும் எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து அருள்புரிகின்றோம். நன்றியுடையவர்களாக இருப்போருக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.

[3:144] முஹம்மது, அவருக்கு முன்பிருந்த தூதர் களைப் போன்ற ஒரு தூதராக இருந்தவரே அன்றி வேறில்லை. அவர் மரணித்து விட்டால், அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் உங்களின் குதிகால்களால் திரும்பிவிடு வீர்களா? எவர் ஒருவர் தனது குதிகால்களால் திரும்பி விடுகின்றாரோ, அவர் சிறிதளவும் கடவுள்-க்குத் தீங்கிழைத்து விடவில்லை. நன்றியுடையவர்களாக இருப்போருக்குக் கடவுள் வெகுமதி அளிக்கின்றார

[3:146] வேதம் வழங்கப்பட்டவர் பலருக்கு,கடவுள்-ன் பாதையில் அவருடன் சேர்ந்து சண்டையிட, நெருக்கடியான தருணங்களிலும் கூட சற்றும் தடுமாறாத, பக்தி மிக்க மக்கள் இருந்தார்கள். அன்றியும் அவர்கள் தயக்கம் கொள்ளவோ அல்லது ஊக்கம் குறைந்து விடவோ இல்லை. கடவுள் உறுதியாய் இருப்பவர்களை நேசிக்கின்றார்.