குர்ஆன் 3:146 — இம்ரானின் குடும்பத்தினர்
வேதம் வழங்கப்பட்டவர் பலருக்கு,கடவுள்-ன் பாதையில் அவருடன் சேர்ந்து சண்டையிட, நெருக்கடியான தருணங்களிலும் கூட சற்றும் தடுமாறாத, பக்தி மிக்க மக்கள் இருந்தார்கள். அன்றியும் அவர்கள் தயக்கம் கொள்ளவோ அல்லது ஊக்கம் குறைந்து விடவோ இல்லை. கடவுள் உறுதியாய் இருப்பவர்களை நேசிக்கின்றார்.
[3:145] முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில், கடவுள்-ன் அனுமதியுடனே அன்றி எவர் ஒருவரும் மரணமடைவதில்லை. எவர் இவ்வுல கின் வீண் பெருமைகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து வழங்குகின்றோம், மேலும் எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து அருள்புரிகின்றோம். நன்றியுடையவர்களாக இருப்போருக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[3:147] அவர்களின் கூற்றெல்லாம், “எங்கள் இரட்சகரே, எங்கள் பாவங்களையும் எங்கள் வரம்பு மீறல்களையும் எங்களுக்கு மன்னிப் பீராக, எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வீராக, மேலும் நம்ப மறுப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை வழங்குவீராக” என்பதாக மட்டுமே இருந்தது.