குர்ஆன் 3:147 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்களின் கூற்றெல்லாம், “எங்கள் இரட்சகரே, எங்கள் பாவங்களையும் எங்கள் வரம்பு மீறல்களையும் எங்களுக்கு மன்னிப் பீராக, எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வீராக, மேலும் நம்ப மறுப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை வழங்குவீராக” என்பதாக மட்டுமே இருந்தது.
[3:146] வேதம் வழங்கப்பட்டவர் பலருக்கு,கடவுள்-ன் பாதையில் அவருடன் சேர்ந்து சண்டையிட, நெருக்கடியான தருணங்களிலும் கூட சற்றும் தடுமாறாத, பக்தி மிக்க மக்கள் இருந்தார்கள். அன்றியும் அவர்கள் தயக்கம் கொள்ளவோ அல்லது ஊக்கம் குறைந்து விடவோ இல்லை. கடவுள் உறுதியாய் இருப்பவர்களை நேசிக்கின்றார்.
[3:148] அதன் விளைவாக, கடவுள் அவர்களுக்கு இவ்வுலகின் வெகுமதிகளையும், மேலும் மறுவுலகின் மேலான வெகுமதிகளையும் வழங்கினார். கடவுள் நன்மை செய்வோரை நேசிக்கின்றார்.