குர்ஆன் 3:149 — இம்ரானின் குடும்பத்தினர்
நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுப்பவர் களுக்கு நீங்கள் கீழ்படிவீர்களானால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களில் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் நஷ்டவாளி களாக ஆகி விடுவீர்கள்.
[3:148] அதன் விளைவாக, கடவுள் அவர்களுக்கு இவ்வுலகின் வெகுமதிகளையும், மேலும் மறுவுலகின் மேலான வெகுமதிகளையும் வழங்கினார். கடவுள் நன்மை செய்வோரை நேசிக்கின்றார்.
[3:150] கடவுள் மட்டுமே உங்கள் இரட்சகரும், எஜமான ரும் ஆவார், மேலும் அவரே மிகச் சிறந்த உதவியாளர் ஆவார்.