குர்ஆன் 3:15 — இம்ரானின் குடும்பத்தினர்
“மிகச் சிறப்பான ஒரு வியாபாரத்தைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன்: நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோருக்கு, அவர்களுடைய இரட்சகரிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்கள், தூய்மையான துணை கள், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளால் மகிழ்ச்சி ஆகியவை தயாராக உள்ளன” என்று கூறுவீராக. கடவுள் தன்னை வழிபடுவோரைப் பார்ப்பவராக உள்ளார்.
[3:14] உலக இன்பங்களான பெண்கள், மக்கட்பேறு, தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல் கள், பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகள் கால் நடைகள், மற்றும் பயிர்கள் ஆகியவை மக்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. இவை இவ்வுலகின் பொருட்கள் ஆகும். கடவுள் - இடத்தில் மிகச் சிறந்த தங்குமிடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
[3:16] அவர்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம், ஆகையால் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பீராக, மேலும், எங்களை நரக நெருப்பின் வேதனை யிலிருந்து காத்திடுவீராக”என்று கூறுகின்றார்கள்.