குர்ஆன் 3:151 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து, நம்ப மறுப்பவர்களின் இதயங்களில் நாம் திகிலை எறிவோம். அவர்களுடைய விதி நரகம்தான்; வரம்பு மீறியவர்களுக்கான தங்குமிடம் எவ்வளவு துக்ககரமானது!
[3:150] கடவுள் மட்டுமே உங்கள் இரட்சகரும், எஜமான ரும் ஆவார், மேலும் அவரே மிகச் சிறந்த உதவியாளர் ஆவார்.
[3:152] கடவுள் உங்களுக்களித்த அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார், மேலும் அவருடைய அனுமதியுடன் நீங்கள் அவர்களை தோல்வியுறச் செய்தீர்கள். ஆனால் பின்னர் நீங்கள் தடுமாறினீர்கள், உங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டீர்கள், மேலும் நீங்கள் மிகவும் விரும்பியதை (வெற்றியை) அவர் உங்களுக்கு காட்டியதன் பின்னரும் கீழ்ப்படிய மறுத்தீர்கள். ஆனால் பின்னர், உங்களில் சிலர் இந்த உலக இலா