குர்ஆன் 3:164 — இம்ரானின் குடும்பத்தினர்
لَقَد مَنَّ اللَّهُ عَلَى المُؤمِنينَ إِذ بَعَثَ فيهِم رَسولًا مِن أَنفُسِهِم يَتلوا عَلَيهِم ءايٰتِهِ وَيُزَكّيهِم وَيُعَلِّمُهُمُ الكِتٰبَ وَالحِكمَةَ وَإِن كانوا مِن قَبلُ لَفى ضَلٰلٍ مُبينٍ
அவருடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், மேலும் அவர்களை பரிசுத்தப்படுத்துவதற்கும், மேலும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் எழச்செய்ததன் மூலம் நம்பிக்கை யாளர்களுக்கு கடவுள் அருள் புரிந்திருக் கின்றார்! இதற்கு முன்பு அவர்கள் முழுவதுமாக தவறான வழியில் சென்று விட்டனர்.
[3:163] அவர்கள் நிச்சயமாக கடவுள்-இடத்தில் வெவ்வேறு அந்தஸ்துகளை அனுபவிப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக உள்ளார்.
[3:165] நீங்கள் இருமடங்கு பாதிப்பை (உங்களின் எதிரிமீது) ஏற்படுத்திய போதும் கூட இப்பொழுது நீங்கள் ஒரு பின்னடைவால் பாதிக்கப்பட்டிருப் பதால் நீங்கள் “ எங்களுக்கு ஏன் இது நிகழ்ந்தது?” என்று கூறினீர்கள். “ இது உங்கள் சொந்த செயல்களின் விளைவு ஆகும்,” என்று கூறுவீராக. கடவுள் சர்வ சக்தியுடையவர்.