குர்ஆன் 3:165 — இம்ரானின் குடும்பத்தினர்
நீங்கள் இருமடங்கு பாதிப்பை (உங்களின் எதிரிமீது) ஏற்படுத்திய போதும் கூட இப்பொழுது நீங்கள் ஒரு பின்னடைவால் பாதிக்கப்பட்டிருப் பதால் நீங்கள் “ எங்களுக்கு ஏன் இது நிகழ்ந்தது?” என்று கூறினீர்கள். “ இது உங்கள் சொந்த செயல்களின் விளைவு ஆகும்,” என்று கூறுவீராக. கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[3:164] அவருடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், மேலும் அவர்களை பரிசுத்தப்படுத்துவதற்கும், மேலும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் எழச்செய்ததன் மூலம் நம்பிக்கை யாளர்களுக்கு கடவுள் அருள் புரிந்திருக் கின்றார்! இதற்கு முன்பு அவர்கள் முழுவதுமாக தவறான வழியில் சென்று விட்டனர்.
[3:166] இரண்டு படைகள் மோதிக்கொண்ட அந்த நாளில் உங்களை எது துன்புறுத்தியதோ, அது கடவுள்-ன் நாட்டத்திற்க்கு ஏற்பவும் மேலும் நம்பிக்கையாளர்களை மேன்மைபடுத்துவதற்காகவுமே ஆகும்.