குர்ஆன் 3:169 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள்-ன் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவித் தவர்களாக, தங்களுடைய இரட்சகரிடத்தில் உயிரோடிருக்கின்றார்கள்.
[3:168] அவர்கள் பின் தங்கி இருந்தவர்களாக, தங்களு டைய உறவினர்களைப் பற்றி அவர்கள், “எங்களுக்கு அவர்கள் கீழ்படிந்திருந்தால் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். “நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், பின்னர் உங்களுடைய மரணத்தை நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக.
[3:170] அவர்கள் கடவுள்-ன் அருளில் மகிழ்ச்சியோடிருக் கின்றார்கள், மேலும் அவர்களுடன் மரணிக்காத தங்களுடைய தோழர்களுக்கு, அவர்கள் பயப்படுவதற்கு எதுவுமில்லை அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்ற நற்செய்தியை வைத்திருக்கின்றார்கள்.